மனித அளவில் சைவ வெளவால்கள் !

பிலிப்பைன்ஸில் மனித அளவிலான வெளவால்கள் இருப்பதைப் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை அதிர்ஷ்டவசமாக, இந்த பெரிய வெளவால்கள் சைவ உணவைமட்டுமே உண்ணக்கூடியவை. அதனால்,  அனைவரும் வெளவால்களுக்கு இரையாகாமல்  பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று அறிந்தவர் கூறுகின்றனர்.

பழங்கள்,  தாவர இலைகளை விரும்பிச் சாப்பிடுவதை இவ்வகை வெளவால்கள்  விரும்புகின்றன.

ஸ்கிரீன் ஷாட்  படங்களின் அடிப்படையில், இந்த  இன வெளவால்கள் 1.7 மீட்டர் வரை இறக்கைகள் விரிக்கும். இருப்பினும், இது தலைகீழாகத்தான் தொங்கும். மனிதர்களுக்கு அச்சத்தையும் பயத்தையும் கொடுக்கும்.

இந்த வெளவால்கள் சிறிய வெளவால்களைப் போல செல்லவோ அதிக அதிர்வெண் ஒலிகளை எதிரொலிக்கவோ, பயன்படுத்தவோ முடியாது. மனிதர்களைப் போலவே இவை தனது கண்களைப் பயன்படுத்தி உணவைத் தேடுகிறது.

இவை பழந்தின்னிகளாக இருப்பதால் மனிதர்கள் பிழைத்திருக்கிறார்கள். ஆனாலும் தொற்றின் நிலைமை குறித்து இன்னும் எவரும் ஆய்வு செய்யவில்லை என்றே தோன்றுகிறது. ஆனாலும் ஆய்வு செய்ய முடியுமா என்றும் அறியப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here