டோக்கியோ ஜப்பான் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வடைந்து உள்ளது.
தென்மேற்கு ஜப்பானின் கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து தென்மேற்கே சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் குமாமோட்டோ பகுதி அமைந்துள்ளது.
இரவு பகலாக மீட்பு பணி
இதனை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. பலர் காயமடைந்துள்ளதுடன், சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
காஷிமா நகரில் உள்ள ‘ஏயான் மால்’ வணிக வளாகத்தின் இரண்டாவது தளம் இடிந்து விழுந்ததில் பலர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர். ‘நிப்பான் பேப்பர் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் யாட்சுஷிரோ ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.









