பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர் என்று ஓசிபிடி நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.
ஜூலை 2ஆம் தேதி இரவு 11 மணி தொடங்கி மறுநாள் 3ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் பல இடங்களில் சாலை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் மொத்தம் 192 கார்கள் சோதனையிடப்பட்டன. அதில் குடி போதையில் கார் வாகனம் ஓட்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு குற்றங்களுக்காக 36 சம்மன்கள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இவ்விவகாரத்தில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நிக் எஸானி சொன்னார்.