மலேசிய பொருள்களுக்கு முன்னுரிமை தாருங்கள்

கோவிட் -19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் தொழில்களின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக ஷாப்பிங் செய்யும் போது மலேசியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உள்நாட்டு நுகர்வோர் விவகார அமைச்சர் டத்தோ அலெக்சாண்டர் நந்தா லிங்கி  வலியுறுத்தினார்.

உள்நாட்டு உற்பத்திகளுக்கான அதிகத் தேவை தேசிய பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் வேலையின்மை விகிதத்தை குறைக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

சித்தராசா மலேசியா திட்டத்தை நடத்துவதற்கு தனது அமைச்சின் முயற்சிகளில், மலேசியர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க மலேசியர்களை ஊக்குவிப்பதாகும், அதே நேரத்தில் மலேசியர்களிடையே தேசபக்தியின் உணர்வைத் தூண்டுவதும்  இதில் அடங்கும்  என்றார் அவர்.

தொழில்கள், தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளை ஊக்குவிப்பதும் இதுதான் வழியாக இருக்கிறது என்று இங்குள்ள விவாசிட்டி மெகாமாலில் சித்தராசா மலேசியா திட்டத்தின் துவக்கத்தின்போது  நந்தா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here