மலையேறி மரணமடைந்தார் ஆடவர்

செராஸில் நண்பர்களுடன் மலையேறிய 61 வயது நிரம்பிய ஆடவர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.

அவரின் மரணத்தை உறுதிப்படுத்திய யுனிவர்சிட்டி மருத்துவமனை அதிகாரிகள் இறந்தவரின் உடலை கீழ் இறக்க தீயணைப்பு வீரர்களின் உதவியை நாடியுள்ளனர்.

தகவல் கிடைத்த பின்னர் செராஸ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 7 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று தீயணைப்பு குழு தலைவர் அப்துல் ரசாக் டெராமான் தெரிவித்தார்.

பின்னர் மரணமடைந்த நபரின் உடலை மலையிலிருந்து கீழே இறக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here