மாலி கிராமங்களுக்குள் புகுந்து மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் – 40 பேர் பலி

பமாகோ:

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஆயுதக் குழுவினரால் இனவாத மோதல்கள் அதிகரித்துள்ளன. இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்.

இதற்கிடையில், அந்நாட்டின் பேங்கஸ் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் புலானி எனப்படும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கிறார்கள்.

கால்நடை மேய்ப்பதை பிரதான தொழிலாக கொண்ட இவர்களுக்கும், டோகன் எனப்படும் ஆயுதம் ஏந்திய வேட்டைக்காரர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பேங்கஸ் மாநிலத்தில் டோகன் இன மக்கள் வசித்து வந்த 4 கிராமங்களுக்குள் புகுந்த புலானி பழங்குடியின மக்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலையடுத்து, பாதுகாப்பு பணியில் ராணுவம் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here