முன்னாள் அதிகாரிகளை சந்தித்தார் ஓசிபிடி நிக் எஸானி

காவல் துறையில் நீண்ட காலமாக பணியாற்றி பல்வேறு சேவைகளை வழங்கிய முன்னாள் உயர் அதிகாரிகளை மரியாதை நிமித்தம் சந்தித்தார் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறை தலைவர் நிக் எஸானி பின் முகமட் பைசல்.

அரச மலேசிய காவல் படையின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ முசா ஹசான் பின் ஹாஜி ஹாசானை அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து நலம் விசாரித்தார். காவல் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து சாதனை புரிந்தவர்களில் முசா ஹசானும் ஒருவர். அவரை நேரில் சந்தித்து பேசியதில் தமக்கு அளாதி இன்பம் என நிக் எஸானி தெரிவித்தார்.

அதோடு, போத்தா சின் வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய காவல் துறை அதிகாரியான கென்னி வூட் வெர்த்தை அவரது இல்லத்தில் நிக் எஸானி சந்தித்தார். அவரின் அனுபவம் கடலை போன்றது. பல முக்கிய வழக்குகளில் போலீஸ் அதிகாரியாக செயல்பட்டு பல சாதனைகளை புரிந்த கென்னி வூட் வெர்த் சிறந்த மனிதர் என்று நிக் எஸானி புகழாரம் சூட்டினார். இவர்களுடன் முன்னாள் போலீஸ் அதிகாரி டத்தோ கிறிஸ்டவர் வான் சூ ஹீயும் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here