சினியில் தேர்தல், யாருக்கு வாய்ப்பு?

கோவிட் -19 தொற்றுநோயை அடுத்து புதிய இயல்பின் கீழ் தேர்தல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், சினி மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு சுமூகமாகத் தொடங்கியிருக்கிறது.

இப்பகுதியில் 13 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 20,816 பேர் தங்களது உரிமைகளைப் பயன்படுத்தி வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது, வக்களிப்பில் 66 வரிசைகள்  உள்ளன, இவற்றில் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்களிப்பு  நடைபெறும். இதன் முடிவு மாலையில் அறிவிக்கப்படும். முடிவுகளை அதிகாரி டத்தோ ஜலிசா சுல்கிப்லி அறிவிப்பார்.

வாக்காளர்களின் பாதுகாப்புகுத் தேவையான அனைத்தும் வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது. அனாலும், பெரும்பான்மை வாக்காளர்கள் சொந்த முகக்கவசங்களையே பயன்படுத்துவதைக் காணமுடிகிறது.

பெரிக்காத்தான் அரசாங்கத்திற்கு  இது  முதல் தேர்தலாகும். இதில் தேசிய முன்னணி வேட்பாளர் போட்டியிடுகிறார். அவர் வெற்றிபெறுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சினி வேட்பாளர்கள் 70 விழுக்காட்டினர் இத்தேர்தலில் வாக்களிப்பர் என்றும் தேர்தல் ஆணையம் கணித்திருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here