உடல் எடை அதிகரித்தது – கொந்தளித்த நித்யா மேனன்

நித்யா மேனன் தமிழில் வெப்பம், ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தற்போது கூட இவர் நடித்த சைக்கோ படம் பெரியளவில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நித்யா மேனன் மீது எப்போதும் உடல் எடை அதிகமாகவுள்ளார் என்று ஒரு புகார் இருந்துக்கொண்டே இருக்கும்.

அதுக்குறித்து நித்யா மேனன், சமீபத்தில் கடுமையாக பேசியுள்ளார், இதில் ‘பலரும் என்னை உடல் எடை அதிகரித்ததாக கூறுகின்றனர்.

ஆனால், உடல் எடை அதிகரிக்க உடலில் ஏதும் பிரச்சனையா, வேறு ஏதும் காரணமா? இது பற்றியெல்லாம் அவர்களுக்கு தெரியாது.

எல்லா பிரச்சனைகளையும் வெளியே கொண்டு வந்து உடைத்து பேச வேண்டும் என்ற அவசியமில்லை.

ஆனால், இந்த சினிமா என் தோற்றம் எப்படியிருக்கிறது என்று மட்டுமே பார்க்கிறது’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here