தமிழகம் முடக்கம். கடைகள் அடைப்பு

தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அமலாகிறது. இன்றைய தினம் காய்கறி கடைகள் இயங்காது. பெட்ரோல் நிலையங்களும் இயங்காது.

தமிழகத்தில் கொரனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

கொரோனாவைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை, திருவள்ளூர் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது.

நாளை முதல் மதுரையில் மேலும் 7 நாட்களுககு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here