இந்திய நகர்வில் சீனா கலக்கம்

சீனா தொடர்ந்து எல்லையில் படைகளை குவித்து வருகிறது. அதேபோல் லடாக்கில் அனைத்து எல்லை பகுதியிலும் சீனா தொடர்ந்து தனது விமான படைகளை குவித்து வருகிறது. அதிக அளவில் சீனா தனது விமானப்படையை களமிறக்கி உள்ளது. சீனாவின் ஊடுருவலை தடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் படைகளை குவித்து வருகிறது.

பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கடந்த சில தினங்களாக எல்லையில் விமான படைகளைக் குவித்து வந்தது. தீவிரமாக ரோந்து பணிகளும் செய்து வந்தது. இந்த நிலையில் அதிரடித் திருப்பமாக நேற்று மிக அதிக அளவில் லடாக் எல்லைக்கு போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் இந்தியா அனுப்பி உள்ளது.

இந்தியா சார்பாக எல்லையில் அதிக போர் விமானங்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி லடாக் எல்லைக்கு தற்போது கண்காணிப்புப் பணியில் நவீன ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவை அட்டாக் வகையான ஹெலிகாப்டர்கள் ஆகும்.

அதிவேகமாக சென்று முகாம்களைத் தாக்கக் கூடிய அட்டாக் வகை ஹெலிகாப்டர்கள் ஆகும். ராணுவ முகாம்களுக்கு மேலே பறந்து சென்று, அதிரடியாக நொடிப்பொழுதில் அதை தாக்கி அழிக்கும் சக்தி கொண்டவை.

அதேபோல் அதிக எண்ணிக்கையில் நேற்று சின்னுக் வகை ஹெலிகாப்டர்களும் களமிறக்கப்பட்டு உள்ளன. இந்த சின்னுக் வகை ஹெலிகாப்டர்கள் எல்லையில் அதிக அளவில் வீரர்களை களமிறக்கவும் உதவும். ஒரே நேரத்தில் 200-300 வீரர்களை இதன் மூலம் எளிதாக இடமாற்றம் செய்ய முடியும். லடாக் எல்லையில் போர் வந்தால், அதிக அளவில் வீரர்களை களமிறக்க வசதியாக இந்தியா இந்த ஹெலிகாப்டர்களை அங்கே களமிறக்கி உள்ளது. அதேபோல் இந்தியா சி 17 குளோப்மாஸ்டர் (C-17 Globemaster III) மற்றும் சி 130 ஜெ சூப்பர் ஹெர்குலீஸ் (C-130J Super Hercules) வகை டிரான்ஸ்போர்ட் விமானங்களும் அங்கே கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. நவீன ஆயுதங்களையும், போர் கருவிகளையும் எல்லைக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த விமானங்கள் களமிறக்கப்பட்டு உள்ளன. மேலும் இல்லுயுசின் 76 (Ilyushin-76) போர் டிரான்ஸ்போர்ட் விமானங்களையும் இந்தியா இங்கே களமிறக்கி உள்ளது. இதனால் இந்தியா அதிக அளவில் படைகளை குவிக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

எல்லைக்கு வீரர்களை அதிக அளவில் அனுப்பும் பொருட்டும் இந்தியா இப்படி விமானங்களை அனுப்பி வருகிறது. இது போக சுகோய் 30MKI, மிக்-29 ரக போர் விமானங்களும் சீன எல்லையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here