பணியைத் தொடரத் தயார் – சினி தேர்தல் வெற்றியாளர்

முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே தனது வேலை நேரம் ஆரம்பமாகிவிட்டதாகக் கூறியிருக்கிறார் சினி இடைத்தேர்தல் வேட்பாளரான 41 வயதான முகமட் ஷரீம். சினி உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதே தனது முக்கிய நோக்கம் என்றும், அவ்வாறு செய்ய அனைத்து உள்ளூர் சமூகத் தலைவர்களையும் சந்திப்பேன் என்றும் அவர் கூறினார்.

ஃபெல்டா சினி 3 இன் இரண்டாம் தலைமுறையைச்சேர்ந்தவர் குடியேறிய முஹமட் ஷரீம், அரசியலைப் பொறுத்தவரை ஒரு விவேக வாதியாகவெ  இருந்தார்  அரசியலில் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், பகாங் மந்திரி  பெசார் டத்தோ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில்,  பெக்கான் எம்.பி. டத்தோ ஶ்ரீ நஜிப் ஆகியோரை  விரும்புவதாகவும் கூறினார். துன் ரசாக் அவரது வழிகாட்டியாக கொண்டிருபதாகவும் கூறுகிறார்.

என்னால் முடிந்ததைச் செய்வேன். கொஞ்சம் அவகாசம் தேவை. அதோடு சேவைகள். தொடர பிரார்த்தனை செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்று  பெக்கானிலுள்ள வாக்களிப்பு இன்ஸ்டிட்யூட் கெமாஹிரான் பெலியா நெகாரா (ஐ.கே.பி.என்)  உள்ள வாக்களிப்பு மையத்தில் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார் .

தேசிய முன்னணி மிகப் பெரிய பெரும்பான்மையுடன் வென்றதால் ஒற்றுமையின் உணர்வு வெளிப்பட்டிருக்கிறது.  இதில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் எதுவும் சாத்தியமாகும் என்பதை நிரூபிக்க முடியும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here