ஊழலில் ஈடுபடும் நபர்கள்

ஜொகூர் பாரு ஶ்ரீ ஆலம் மாவட்ட காவல் தலைமையகத்தைச் சேர்ந்த மூன்று போக்குவரத்து போலீசார், சாலைத்தடுப்பின்போது லாரி ஓட்டுநரிடமிருந்து 4 ஆயிரம் பணம் பறித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜொகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அயோப் கான் மைடின் பிட்சை கூறுகையில், லாரி ஓட்டுநர் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி 32 முதல் 39 வயதுக்குட்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றார்.

மிரட்டிப் பணம் பறிப்பதற்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 384 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது, இதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் , பிரம்படி அல்லது இரண்டில் ஏதேனும் தண்டனை விதிக்கப்படலாம் என்று அவர்  செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அதிக சுமை கொண்ட லாரியை ஓட்டியதற்காக சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவரை தடுத்து நிறுத்தியதாகவும், 4,000 வெள்ளிகோரியதாகவும் அயோப் கான் கூறினார்.

ஊழலில் ஈடுபடும் நபர்கள் மீது ஜொகூர் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

போதுமான ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வேண்டும் . இதற்கிடையில், இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 30 வரை ஓப்ஸ் சாம்செங் ஜலான் குற்றங்களின்  கீழ் 15 முதல் 26 வயதுக்குட்பட்ட 60 நபர்களை போலீசார் கைது செய்ததாக அயோப் கான் தெரிவித்தார்.

அவர்களில் பெரும்பாலோர் ஜொகூர் பாரு, பத்து பஹாட் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here