400 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தியதாக இருவர் மீது குற்றச்சாட்டு

ஈப்போ :

400 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தியதாக இருவர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

44 வயதான சூங் பூன் வா மற்றும் செங் சுங் லியோங் ஆகிய இருவர் மீதும் ஆகஸ்ட் 15 அன்று கெமோரின் ஜாலான் ஸ்ரீ கிளெபாங்கில் உள்ள ஒரு வீட்டில் 413.826 கிலோ nimetazepam போதைப்பொருளை கடத்தியதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B(1)(a) இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 39B (2) இன் கீழ் தண்டிக்கப்படலாம்,

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் குறைந்தபட்சம் 12 பிரம்படிகளுடன் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை எதிர்கொள்வார்கள்.

மாஜிஸ்திரேட் எஸ். புனிதா முன்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) இங்கு மாண்டரின் மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது, இருப்பினும் மனு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை.

வழக்கை மீண்டும் செவிமடுக்க நவமபர் 16 ஆம் தேதியை நீதிபதி நிர்ணயம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here