நமக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை : ஆனால் அவர்கள் சட்டப்பூர்வமாக இருக்க வேண்டும்

போர்ட் கிள்ளான்: மலேசியாவுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவை. ஆனால் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரிடம் கருணை காட்ட முடியாது என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ  ஹம்சா ஜைனுடீன் (படம்) கூறுகிறார். உள்துறை அமைச்சராக, மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் மலேசியாவில் வசிப்பவர்கள் நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்படுவதை உறுதி செய்வதே எங்களின் முக்கிய அக்கறை என்று அவர் கூறினார்.

நாங்கள் அவர்களை (வெளிநாட்டுத் தொழிலாளர்களை) விரும்பவில்லை என்பதல்ல. இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய அவர்கள் எங்களுக்குத் தேவை. குறிப்பாக கனரக வாகனங்களை இயக்கும் ( தூக்கும்) வேலைகளுக்கு எங்களுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். ஆனால் அவர்கள் சட்டப்பூர்வமாக இருப்பது மிக அவசியமாகும். இந்த நாட்டில் வசிப்பவர்கள் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்பதை என்றும் வெளிநாட்டினர்  இங்கு வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு அனுமதி மற்றும் ஆவணங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றார்.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறினாலும், மக்கள் விரும்புவது அதைத்தான் நான் உணர்கிறேன் – சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கும். கதைகளை திரித்து கூற விரும்பும் வெளிநாட்டு அறிக்கைகளைப் பற்றி நாங்கள் கவலைப்படக்கூடாது. சட்டம் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளின்படி நாங்கள் கைது நடவடிக்கையை தொடர்வோம் என்று ஹம்சா கூறினார்.கோவிட் -19 தாக்கத்தின் போது ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை கையாள்வதில் மலேசியா கடுமையாக நடந்து கொண்டதாக வெளிநாட்டு செய்தி ஊடகத்தின் சமீபத்திய அறிக்கை குறித்து கருத்து கேட்டபோது அவர் மேற்கண்ட பதிலை வழங்கினார்.  .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here