பத்துமலை சுண்ணாம்பு குகையின் ரகசியம் என்ன?

பத்துமலை சுண்ணாம்புக் குகைக்கு அருகிலுள்ள நிலத்தை வைத்திருக்கும் சொத்து நிறுவனம்  அதை ஓர் ஆன்மீக அமைப்புக்கு விற்க ஒப்புக்கொண்டதாக செய்தி ஒன்று கூறுகிறது.

பத்து குகைகளைப் பாதுகாக்கும் கொள்கையை செலயாங் நகராட்சி மன்றம் கைவசப்படுத்தியிருக்கிறது . மேலும் குகைக் கோயிலின் அடிவாரத்தின் வளர்ச்சிக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக 10 ஆண்டுகளுக்கு முன்பே எஸ் எம் சி முடிவெடுத்திருந்தது.

திட்டத்திற்கான ஒப்புதல் ஒரு மர்மமாகவே இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதில்  உள்ளூர் அதிகாரம் ஒன்று பச்சை விளக்கு வழங்கியிருப்பதாக அதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர், ஆனால், எந்தவொரு திட்டமும் சமர்ப்பிக்கப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை  என்ற அடிப்படையில், பேசப்படும் எந்தவொரு திட்டம் பற்றியும் எஸ் எம் சி தெரிவிக்கவில்லை என்கிறதாம்.

பல செய்தி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்திரிகையாளர்களின் குழுவால் பார்வையிடப்பட்ட பதிவுகள், ஆவணங்கள் யாவும் 2017 மார்ச் மாதத்தில் சொத்து நிறுவனம் ஆன்மீக இயக்கத்திற்கு  1.2 மில்லியனுக்கு விற்க ஒப்புக்கொண்டதாக காட்டுகின்றனவாம்

நான்கு மாதங்கள் கழித்து விற்பனை ,  கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்முதல் விலையில் 10 விழுக்காடு வைப்புத்தொகையும் செலுத்தப்பட்டது.

ஆனால், ஆன்மீக இயக்கத்தால் மேலும் பணம் செலுத்தப்படவில்லை என்றும்  இது மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தது என்றும்  இதன் விளைவாக அதிகப் பணம் செலுத்தப்பட்டது என்றும் தகவல்கள் இருக்கின்றன.

இருப்பினும், 2019 ஆம் ஆண்டில், சொத்து நிறுவனம் ஒப்பந்தத்தை நிறுத்தியது. ஆன்மீக அமைப்பு செலுத்த வேண்டியதை செய்யத் தவறியதால்  ஏற்கனவே செலுத்திய தொகை பற்றிய விவரங்கள் கேள்விக்குறியாக இருந்தது.

தற்சமயம்,  ஆன்மீக அமைப்புக்காக நிலத்தை வாங்குவதற்காக பல தரப்புகள் சொத்து நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அறியப்படுகிறது.

இந்த குழு சில விசாரணைகளை மேற்கொண்டதிலிருந்து பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதும் தெரியவருகிறது.

நிலம் அழித்தல், அகழ்வாராய்ச்சி பணிகள் பத்து குகைகளின் சுண்ணாம்பு உருவாக்கம், பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், அருகிலுள்ள மேம்பாட்டுத்திட்டதின் உரிமையாளர், தனது நிலத்தின் வழியாக சாலை அமைக்க முறையிட்டதாகக் கூறுவதை  நிராகரிதிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஆன்மீக அமைப்பின் செய்தித் தொடர்பாளரரைத் தொடர்பு கொண்டபோது, ​​எஸ்.எம்.சி, சொத்து நிறுவனம் இரண்டுமே 2018 முதல் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அறிந்திருப்பதாகக் கூறினார்.

இருப்பினும், ஒப்புதல் வழங்கப்பட்டதைக் காட்ட எந்த ஆவணங்களையும் அவரால் காட்ட முடியவில்லை.

நிதி திரட்டும் முயற்சியில், ஆன்மீக அமைப்பு 2018 இல் ஒரு வீடியோ கிளிப்பை தயாரித்து விநியோகித்தது, அதில் ஒரு நிர்வாகக்  கட்டடம், ஒரு தியான மண்டபம், தங்குமிடங்கள், தோட்டங்கள்  என  பல்வேறு வசதிகள் இருந்தன.

இப்பகுதியை ஒரு முழுமையான ஆன்மீக மையமாக அபிவிருத்தி செய்வதே இப்போதைய திட்டம். அத்தகைய வளர்ச்சி அனுமதிக்கப்படாது என்று எஸ்.எம்.சி வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிகிறது.

இது, எப்போது சரியாகத் தீர்க்கப்படும் என்பதற்கான அறிகுறி எதுவும் இதுவரை இல்லை.  மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கினால் இப்பகுதியில் உள்ள தாவரங்கள், இயற்கை எழில் விலங்கினங்களுக்கு ஆபத்து என்பது மட்டும் உண்மை.

மேம்பாட்டுத்திட்டங்கள் எதுவென்றாலும் எம் எஸ் சி முதலில் அறிந்திருக்க வேண்டும். ஆனால், அங்கிருந்து எந்த பதிலும் திருப்தியாக இல்லை என்பதாகத்தான் தெரிகிறது.

ஆன்மீகச் செயல்பாடுகளுக்குத் தீமை நேராமல் இருக்க வேண்டும் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

ஆன்மீக மக்களும் அதைத்தான் விரும்புவர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here