கவனிப்பாளர் யாருமின்றி.. காடு மண்டிக் கிடக்கும் டேசா திமியாங் திடல்

திடலில் பந்து விளையாடினால் பந்துக்கு பதிலாக கல்லுடன் விளையாட வேண்டிய அவல நிலையில் நாங்கள் தவிக்கிறோம் என்கிறார்கள் தாமான் டேசா திமியாங் இந்திய இளைஞர்கள்.

புற்களுடன் கற்கள் ஒரு புறம், குழிகள் இன்னொரு புறம் என நிறைந்து காணப்படுகிறது என கூறும் இளைஞர் விக்னேஸ்வரன் வெங்காடசலம், அதனால் காலில் அவ்வப்போது ரத்த காயங்கள் ஏற்பட்டு அவதிப்படுகிறோம். மேலும் மழை பெய்தால் திடலிலுள்ள குழிகளில், நீர் தேக்கம் ஏற்பட்டு, வெள்ளத்தில் மிதக்கும் அவல நிலையும் ஏற்படுகிறது.

சுமார் 35 ஆண்டுக்கால பழமைவாய்ந்த இந்த திடலில், ஒரு புறம் சமுக மண்டபமும், மறுப்புறம் சைன்ஸ் நிறுவனத்தின் தண்ணீர் டங்கியும் அமையப் பெற்றதால், திடல் சுறுங்கி விட்டது. இதனால் கால்பந்து விளையாட்டை நடத்துவதில் இட வசதியின்றி தவிக்கிறோம்.

சமுக மண்டபம் இருக்கட்டும், ஆனால் தண்ணீர் டாங்கியை பாதுகாப்பான வேறொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு அவர்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்கள். மேலும் திடலை முறையாக சுத்தப்படுத்தி, பராமரிக்க ஒரு நடவடிக்கை குழுவை அரசு தரப்பு அமைக்க வேண்டும் என கிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

இளைஞர்கள் விளையாட்டு துறையில் ஈடுப்பட்டு வேண்டும் என அரசாங்கம் தூண்டுக்கிறது, ஆனால் பொது இடங்களில் இதுப் போன்ற விளையாட்டு திடல்கள் நிர்மானிக்கப்பட்டும், அதனை நிர்வாகிக்க பொறுப்பான பொறுப்பாளர்கள் இல்லாமல் போவது வருத்தமளிக்கிறது.

இத்திடல் நிலைக்குறித்து இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகர மன்ற உறுப்பினர்கள் கவனத்திற்கு பல முறை கொண்டு சென்றும் பயனில்லாமல் போயிற்று என அந்த இளைஞர்கள் மனம் குமுறினார்கள்.

மேலும் டேசா திமியாங் விளையாட்டு திடலின் தரம் மேம்படுத்தும் நடவடிக்கையை அரசு தரப்பு முடுக்கிவிட வேண்டும் என கிருஷ்ணன் மற்றும் விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்கள். அதே வேளை இத்திடலில் மின்சார விளக்கு வசதிகளும் கிடையாது.

இரவில் இருண்ட நிலையில் காணப்படுவதால், அவ்வட்டார பொதுமக்கள் இங்கு வருவதற்கும், பொது விழாக்கள் நடத்துவதற்கு அச்சப்படுகிறார்கள். அப்படியே நடந்தாலும் விழாக்களில் அல்லது குடும்பம் மற்றும் பொது நிகழ்ச்சிகள் கலந்துக்கொள்ள தயங்குகிறார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இதனிடையே நேற்று காலை அங்கு திரண்ட அவ்வட்டார இந்திய இளைஞர்கள் திடலை துப்புறவுப்படுத்தும் சேவையில் ஈடுப்பட்டார்கள். குறிப்பாக தங்களால் இயன்றளவு அங்குள்ள மரம் மற்றும் செடிகளை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

– நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here