லஞ்சம் வாங்கியதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு: ஜோகூர் பாரு செஷன் நீதிமன்றத்தில் நான்கு இலக்க தொகையை லஞ்சமாக  வாங்கியதாக போலீஸ் லான்ஸ் கார்போரல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீதிபதி கமாருடீன் கம்சுன் முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது 32 வயதான முகமட் ரோஸ்டி முகமது குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

அவர் டிசம்பர் 2016 முதல் மார்ச் 2017 வரை குளுவாங் ஜாலான் பாலோவில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு அருகில் அக்குற்றங்களை புரிந்துள்ளார். பணி அனுமதி இல்லாமல் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தியதற்காக தங்களுக்கும் அவர்களது தொழிற்சாலைக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க விரும்பிய இரண்டு நபர்களிடமிருந்து RM800 முதல் RM2,000 வரை லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

முகமட் ரோஸ்டிக்காக வழக்கறிஞர் நூர் அஃபிகா ஹம்பாலி ஆஜாரானார். இந்த வழக்கை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அரசு அதிகாரி சுஹைலி சோபூன் விசாரித்தார். நீதிபதி 12,000 வெள்ளி ஒரு நபர் ஜாமீன் வழங்கியதோடு அடுத்த வழக்கு விசாரணை க ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here