உறைவிடப் பள்ளியில் மகன் கொடுமைப்படுத்தப்பட்டதாக தாயார் போலீஸ் புகார்

செராஸ் உறைவிடப் பள்ளியில் கொடுமை தாங்க முடியாமல் ஓடிய மாணவனின் தாய், சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செவ்வாய்கிழமை (டிசம்பர் 19) காலை 11.16 மணிக்கு சென்சிலர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் போலீஸ் சாவடியில் புகார் அளித்ததாக 38 வயதான பெண் கூறினார். எனது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் நான் போலீஸ் புகாரை தாக்கல் செய்தேன். அவர் தற்போது குணமடைந்து வருகிறார். தேவைப்பட்டால் காவல்துறையிடம் வாக்குமூலம் அளிக்கத் தயாராக உள்ளார் என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

முன்னதாக, மூன்று உடன்பிறப்புகளின் மூத்த மகனான தனது மகன் கொடுமைப்படுத்தப்பட்டதாக புகார் செய்ததாக ஷுஹாதா கூறினார். ஆனால் தான் அவரிடம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் மற்றும் கொடுமைப்படுத்துபவர்களுடன் இந்த விஷயத்தை சுமுகமாக தீர்க்குமாறு அறிவுறுத்தினேன். இதற்கிடையில், செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜாம் ஹலீம் ஜமாலுதீனைத் தொடர்பு கொண்டபோது, புகார் கிடைத்ததை உறுதிப்படுத்தினார்.

14 வயது மாணவன் டிசம்பர் 8ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்டது. ஆனால் பின்னர் அதே நாளில் பலவீனமான நிலையில் அவரது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆகியோரால் பண்டார் துன் ரசாக் சைடினா உத்மான் மசூதியில்  கண்டுபிடிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here