ஹஜ் யாத்திரை ஒத்திவைப்பு

இந்த ஆண்டு ஹஜ் யாத்ரீகர்களை அனுப்புவதை தாமதப்படுத்த மலேசிய அரசாங்கம் முடிவு எடுத்திருப்பதாக மலேசியாவிற்கான சவுதி அரேபியாவின் தூதர் டத்தோ  டாக்டர் மஹ்மூட் ஹுசியன் சைட் கட்டான் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் மலேசிய (முஸ்லிம்களின்) கருத்துக்களை பல்வேறு தளங்களில் பரிசோதித்து வருவதாகவும் அவர்  கூறினார்.

இந்த விஷயத்தில் மலேசிய அரசாங்கத்தின் முடிவுகளை மலேசியர்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வதைக் காணமுடிவதாக அவர் தெரிவித்தார். மலேசிய முஸ்லீம் மக்கள் ஹஜ் யாத்திரையின் முக்கியதுவத்தை நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள் அதுபோலவே  உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் மக்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள் என்றார் அவர்.

மேன்மைதங்கிய மலேசிய  மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான (இஸ்லாமிய ஆண்டு 1441 ஏ.எச்) புனித யாத்திரை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக ஜூன் 11 ஆம்நாள் மலேசியா அறிவித்தது.

ஜூன் 23 ஆம்நாள் சவுதி ஹஜ் உம்ரா யாத்திரைக்கு சவுதியில் வாழும் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இந்த ஆண்டு செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வெளியுறவு மந்திரி ஹிஷாமுடின் துன் ஹுசேய்ன், பிரதமர் துறை (மத விவகாரங்கள்) அமைச்சர் டத்தோ டாக்டர் சுல்கிஃப்லி முகமட் அல்-பக்ரியுடன் ஜூன் 24 ஆம்நாள்  வெளியிட்ட  ஒரு கூட்டு அறிக்கையில், இந்த விவகாரத்தில் சவுதி அரேபியாவின் நிலைப்பாட்டை மலேசியா வரவேற்றுள்ளது என்றார்.

மேலும் கருத்து தெரிவித்தபோது இந்த விஷயத்தில் மலேசியாவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நெருக்கமான உறவுகளை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜூலை 6 ஆம் நாள் நிலவரப்படி, சவுதி அரேபியாவில் 213,716 புதிய வழக்குகள், 4,207 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 காரணமாக, பிப்ரவரி பிற்பகுதியில் சவுதி அரேபியா உம்ராவுக்கான யாத்ரீகர்களின் நுழைவை நிறுத்தியது, மார்ச் நடுப்பகுதியில் சர்வதேச விமானங்களை மதீனா உள்ளிட்ட பல நகரங்களுக்கு உள்வரும், வெளிச்செல்லும் போக்குவரத்து  நகர்வுகளுக்குத்தடை விதித்தது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here