இணைய சூதாட்டம் தொடர்பில் 14 சீனப்பிரஜைகள் உட்பட 17 பேர் கைது

கோலாலம்பூர்:

பங்சார், ஜாலான் கெரிஞ்சியில் உள்ள வளாகத்தில் குடிநுழைவுத் துறை நேற்று மேற்கொண்ட நடவடிக்கையில் 17 பேரை கைது செய்ததுடன், இணைய சூதாட்ட கும்பலையும் முறியடித்தனர்.

இரவு 11 மணியளவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 20 முதல் 30 வயதுடைய 14 சீனர்கள் மற்றும் மூன்று உள்ளூர் ஆண்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று, குடிநுழைவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.

ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுமக்கள் அளித்த தகவல் மற்றும் உளவுத்துறையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.

“குறித்த மையத்திலிருந்த சந்தேக நபர்கள் வளாகத்தின் கதவை திறக்க மறுத்ததால், நாங்கள் நுழைவாயிலை உடைக்க வேண்டியிருந்தது என்று இன்று நடந்த ஒரு சிறப்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

கைது செய்யப்பட்ட சீன நாட்டு சந்தேக நபர்கள் அனைவரும் செல்லுபடியாகும் அடையாள அட்டை மற்றும் பயண ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர் என்றும் ரஸ்லின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here