ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சரின் செயலாளர் கைது

நாட்டின் பாதுகாப்பு முறையை பராமரிப்பதற்கான ஒரு திட்டம் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஒருவர் 56 மில்லியன் வெள்ளி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்,.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) தனது தலைமையகத்தில் ஓர் அறிக்கையைப் பதிவு செய்த பின்னர்,  இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டார்.  49 வயதான சந்தேக நபரான இவர், ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பார் என்று  அறியப்படுகிறது.

இந்த வழக்கில் ஊழல்தடுப்பு ஆணையம் விசாரணையை எளிதாக்குவதற்காக சந்தேக நபருக்கு எதிராக மாஜிஸ்திரேட் ஷா விரா அப்துல் ஹலீம் இன்று முதல் ஆறு நாள் தடுப்பு விசாரணை  உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஆதாரங்களின்படி, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஓர் அமைச்சகத்துடன் நேரடி பேச்சுவார்த்தை மூலம் திட்டத்தைப் பாதுகாக்க உதவியதற்காக  இந்நபருக்கு ஒரு நிறுவனத்திடமிருந்து மில்லியன் கணக்கான  தொகை கைமாறியதாக கண்டறியப்பட்டது.

இவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு ஆணையம் பல்வேறு நாணயங்கள்,  ஆவணங்கள், 70,000 வெள்ளி என  கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here