தாமான் கியாரா பூங்கா மாநகர மன்ற கட்டுப்பாட்டில் இல்லையாம்!

தாமான் லெம்பா கியாரா பூங்கா தேசிய இயற்கைத் துறையின் அதிகார எல்லைக்கு உட்பட்டிருப்தாகத் தெரியவந்திருக்கிறது.

பூங்காவின் பாதுகாப்பபுக்கு இயற்கைத்துறையே பொறுப்பேற்கத்தகுதிடையதாக  கோலாலம்பூர்  மாநகர் மன்றம்   தெளிவுபடுத்தியது.

இந்த  லெம்பா கியாரா பூங்கா பொதுவாக டி.டி.டி.ஐ பூங்கா என்று அழைக்கப்படுகிறது, இது தாமான் துன் டாக்டர் இஸ்மாயில்  பகுதியில் அமைந்துள்ளது.

மாநகர் மன்றத்தின்  கார்ப்பரேட் திட்டமிடல் இயக்குநர் கைருல் அஸ்மிர் அஹ்மத் கூறுகையில்  இந்த பூங்கா  கோலாலம்பூர் மாநகர கட்டுப்பாட்டில் இல்லை. அதன் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது  என்றார் அவர்.

திங்கட்கிழமை தாமான் லெம்பா கியாரா பூங்கா பற்றிய செய்தி ஒன்று வைரலானது. வெளியிடப்பட்ட  கட்டுரை குறித்து அவர்  கருத்துரைத்தார்.

கட்டுரையில், மரங்கள் விழும் அபாயம் இருப்பதாக பார்வையாளர்களுக்குத் தெரிவிக்கும் வண்ணம்  அடையாளங்களை  மாநகர் மன்றம் வைத்ததாகக் கூறப்பட்டது.

டிடிடிஐ குடியிருப்பாளர் வில்லியம் ஹூய்  என்பவர் ஏரியில் சாய்ந்திருக்கும் பெரிய மரங்கள் பார்வையாளர்களுக்கு விபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தினார், மேலும் மரங்களில் ஒன்று விழுந்துவிட்டதாகவும் கூறினார்.

மற்றொரு டி.டி.டி.ஐ குடியிருப்பாளரான ஃபதேஹா முகமட் சாலே, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கிளைகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தாமான் லெம்பா கியாரா மாநகர் எல்லையில் இருந்தாலும் மாநகர் மன்ற கட்டுப்பாட்டில் இல்லை என்பதைக்கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here