டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்திக் கொலை – அறுவர் மீது இன்று குற்றச்சாட்டு

பிரபல தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் என்பவரை கடத்திக் கொலை செய்த வழக்கில் அறுவர் இன்று பெட்டாலிங் ஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகின்றனர்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் டத்தோ அந்தஸ்து கொண்டிருக்கும் ஒருவரும் இதர ஐவரும் இன்று காலை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

இவர்கள் மீது 1961ஆம் ஆண்டு செக் ஷன் 3 பிரிவின் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டபடுகிறது என்று சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வு பிரிவின் தலைவர் டத்தோ ஃபாட்சில் அமாட் கூறினார்.

இவ்வழக்கில் மொத்தம் 11 பேர் கைது செய்து விசாரிக்கப்பட்டனர். இதில் அறுவர் மீது குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என்று சட்டத்துறை அலுவலம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று டத்தோ ஃபாட்சில் அமாட் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here