தப்பியோடும் முயற்சி தோல்வியில் முடிந்தது

முறையான வேலை பெர்மிட் வைத்திராத 17 அன்னியத் தொழிலாளர்கள் அமலாக்க அதிகாரிகளைக் கண்டவுடன் தப்பியோட முயற்சித்தனர். எனினும் அவர்கள் அனைவரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

பந்திங் நகரில் நேர்ந்த இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் கோவிட் 19 பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் முகமட் சுக்ரி நாவி தெரிவித்தார்.

இந்தியாவைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் சிகை அலங்கார நிலையத்தை நடத்தி வந்துள்ளனர். அதிகாரிகள் அங்கு சோதனை நடத்த வந்தபோது அவர்கள் அனைவரும் அங்கிருந்து தலை தெறிக்கத் தப்பியோடினர்.

அதிகாரிகள் அவர்களை துரத்திச் சென்று அனைவரையும் கைது செய்தனர் என சுக்ரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் வேலை பெர்மிட் வைத்திருக்கவில்லை. அவர்கள் அனைவரும்  கோவிட் 19 பரிசோதனைக்குப் பின்னர் 14 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here