அலைப்பேசி மூலம் மக்களிடம் பணம் பறித்து வந்த கும்பலை பெட்டாலிங் ஜெயா மற்றும் புக்கிட் அமான் அதிகாரிகள் இணைந்து கைது செய்தனர் என்று ஓசிபிடி நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 7ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் ஜாலான் டுரோபிக்கானாவில் அமைந்துள்ள சில வீடுகளில் போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் மேற்கொண்டனர்.
இதில் மொத்தம் 13 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவருமே அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். 11 ஆண்களும் 2 பெண்களும் இதில் அடங்குவர். மேலும் இதில் தொடர்புடைய மலேசிய பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளிலிருந்து பல்வேறு வகையிலான 31 தொலைப்பேசிகள், 10 கணினிகள், இணைய பெட்டி உள்ளிட்ட பல பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக 4 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் நிக் எஸானி கூறினார்.









