ஜூலை 15 ஆம் தேதி முதல் வழிப்பாட்டுதலங்களில் கூடுவோருக்கான வரம்பு இல்லை

புத்ராஜெயா: ஜூலை 15 முதல் வழிபாட்டுத்தலங்கள்  மசூதிகள் அல்லது ஒரு மாநாடு, சமூகக் கூட்டம் அல்லது பிரார்த்தனைகளில் எத்தனை பேர் கலந்து கொள்ளலாம் என்பதற்கு இனி வரம்பு இருக்காது என்று டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் (படம்) கூறுகிறார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திருமண விருந்தினர்கள் மற்றும் மசூதிகள் நிகழ்வு இடத்தின் அளவைப் பொறுத்து எத்தனை பேர் பங்கேற்க முடியும் என்பதை தீர்மானிக்க சிறப்பு அமைச்சரவைக் குழு ஒப்புக் கொண்டுள்ளது என்று சமூக அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் திருமணங்கள் போன்ற சமூகக் கூட்டங்களில் கலந்துகொள்ள அரசாங்கம் அதிகபட்சம் 250 பேரை மட்டுமே அனுமதித்தது. அதே நேரத்தில் மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தளங்கள் அதன் மூன்றில் ஒரு பகுதியைல  நிரப்ப அனுமதிக்கப்பட்டிருந்தது.

சமீபத்திய முடிவின்  வழி நாங்கள் அதை அமைப்பாளர்களிடம் விட்டு விடுகிறோம். உதாரணமாக  ஒரு விருந்துக்கு 1,000 விருந்தினர்களை விருந்து மண்டபம் நிரப்ப முடியும் என்றால் கூடல் இடைவெளியை பின்பற்ற  800 பேருக்கு இடமளிக்க முடியும் என்றால் அந்த நிகழ்வில் அத்தனை  விருந்தினர்கள் கலந்து கொள்ளலாம். மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் தொழுகைக்கு வருபவர்களுக்கும் இதுவே பொருந்தும். பிரார்த்தனை மண்டபத்தின் மூன்றில் ஒரு பகுதியை நிரப்ப நாங்கள் இனி மட்டுப்படுத்தவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here