நோரா அன்னே மரண விசாரணையை குடும்பம் வரவேற்கிறது

பிரான்கோஐரிஷ் நோரா அன்னே குய்ரின் என்ற சிறுமி காணாமல் போனபின்  ஒரு குடும்ப விடுமுறையின் போது, ஒரு காட்டுப்பகுதியில் இறந்து கிடந்ததைக்கண்டனர்.  மலேசியாவில் அவரது மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்க விசாரணை நடத்தப்படும் என்ற செய்தியை அச்சிறுமியன் குடும்பத்தார் வரவேற்றனர்.

வெளிநாடுகளில் நெருக்கடியில் இருக்கும் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு ஆதரவு வழங்கும் தொண்டு நிறுவனமான லூசி பிளாக்மேன் டிரஸ்ட் (எல்.பி.டி),  அனுப்பிய அறிக்கையில் , நோரா அன்னேவின் குடும்பமும் கொரோனர் நீதிமன்றத்துடன் முழுமையாக ஒத்துழைக்கும் என்றும், இதன் மூலம் சாட்சிகளாக ஆஜராவதாகவும் கூறினார்.

சிரம்பானில் உள்ள கொரோனர் நீதிமன்றம் 2020 ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கி விசாரணைக்கு தேதிகளை நிர்ணயித்துள்ளது. நீதிக்கான நோக்கம் முன்னேறி வருவதில் மகிழ்ச்சியடைவதாக நோராவின் குடும்பம் கூறியிருக்கிறது.

நோராவின் வழக்கை 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காவல்துறையினர் மூடிய பின்னர்,  அவ்வழைக்கை மீண்டும் திறக்க மிகவும் போராடியதாக நோராவின் குடும்பத்தார் காணொளி ஒன்றில் கூறினர்.

விசாரணையைத் தொடர, ஆகஸ்ட் 24 ஆம் தேதி கொரோனர் நீதிமன்றம் நிர்ணயித்தது.

தேதிகளை நிர்ணயித்த கொரோனர் மைமூனா எய்ட், செப்டம்பர் 4 ஆம்நாள் வரை இரண்டு வாரங்களுக்கு இவ்வழக்குத்  தொடரும் என்று கூறினார்.

நோரா அன்னே ஆகஸ்ட் 4 ஆம் தேதி காணாமல் போனார், ஒரு நாள் முழுவதும் அவரும் அவரது பெற்றோரும் மலேசியாவுக்கு இரண்டு வார விடுமுறைக்காக இங்குள்ள பாண்டாயில் உள்ள ஒரு ரிசார்ட்டிற்கு வந்தனர்.

அவரது உடல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஒரு மலைப்பாங்கான பகுதியில் உள்ள ஒரு நீரோடை அருகே, மலைக்காடு ரிசார்ட்டிலிருந்து 2.5 கி.மீ தூரத்தில், ஒரு பெரிய தேடலைத் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் நோரா அன்னாவின் மரணத்தில் எந்தவிதமான குற்றவியல் கூறுகளும் இல்லை என்றும், நீண்ட நாட்கள் பசி, மன அழுத்தத்திலிருந்து இரைப்பை குடல் ரத்தப்போக்கு காரணமாக அவர் இறந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here