கொரோனா பாதிப்பினால் நாடு திரும்ப முடியாமல் சென்னை, இந்தியா, சவுதி அரேபியாவிலிருந்து மொத்தம் 205 மலேசியர்கள் கோலாலம்பூர் அனைதுலக விமான நிலையத்திற்கு (கே.எல்.ஐ.ஏ) மலிண்டோ ஏர், சவுதியா ஏர்லைன்ஸ் வழியாக வந்து சேர்ந்தனர் என்று வெளியுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோ கமாருடின் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட குடிமக்களில் 102 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதில், 103 பேர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொருவரும் வியாழன், வெள்ளிக்கிழமையில் பிற்பகல் வந்து சேர்ந்தனர், மேலும் அவர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தவுடன் சுகாதாரப் பரிசோதனை செய்து கொண்டனர்.
அவர்கள் , அந்நதந்த இடங்களில் 14 நாள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப் பட்டனர். அவர்கள் திரும்பி வருவதற்கு சென்னையில் உள்ள மலேசியாவின் துணைத் தூதரகம், ரியாத்தில் உள்ள மலேசியத் தூதரகம் ஆகியவை பயணிகளால் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களுடன் வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தனர்.
இந்தியா, சவுதி அரேபியாவில் உள்ள மலேசிய அரச பிரதிநிதிகள் தற்போதைய நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இரு நாடுகளிலும் உள்ள மலேசியர்களுக்குத் தகுந்த உதவிகளை வழங்குவதில் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பார்கள் என்று அவர் கூறினார்.