எல்லையின் ஊழல் இன்னும் இருக்கிறது – டான்ஶ்ரீ ஹமீட் பாடோர்

புலம்பெயர்ந்த கடத்தல் தரப்புகளிடமிருந்து லஞ்சம் வாங்கும் நாட்டு எல்லைகளின் பாதுகாப்புப் படையினர் நாட்டிற்கு துரோகம் செய்கின்றனர்  என்று போலீஸ் தலைமை இன்ஸ்பெக்டர் டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் பாடோர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பைப் பராமரிக்க நியமிக்கக்கப்பட்டவர்கள் சிலர் இத்தகைய இழிவான செயல்களைச் செய்கின்றனர். இவர்களின் விரோதசெயல்களால் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நாட்டிற்குள் அத்துமீற அனுமதித்துள்ளன  என்று அவர் சாடினார்.

எல்லையை நிர்வகிக்கும் எந்தவொரு பாதுகாப்புப் படையினரும் ஒரு மோசமான தரப்பிடமிருந்து லஞ்சம் வாங்குவது பொறுப்பற்ற செயலாகும் என்றார் அவர். இது, நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகும் என்று புக்கிட் அமானில் நடந்த சிறப்பு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.

எல்லைகளில் உள்ள அதிகாரிகள், போலீசார் ஒவ்வொரு மாதமும் மாற்றம் செய்ப்பட்டாலும் அந்த அமைப்பில்  குறைபாடுகள் உள்ளன.

இதன் காரணமாக, அவர்கள் (நாட்டின் எல்லைகளை பாதுகாப்பவர்கள்) அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் செயல்படுகிறார்கள். மேலும் அதிகாரிகளிடமிருந்து பல நபர்களுடன் உறவுகளை உருவாக்குவதில் தீய தரப்புகள்  வெற்றி பெறுகின்றன, எனவே ஊழல்கள் தொடர்ந்து நடக்கின்றன. தலைக்கு அல்லது ஒரு பயண அடிப்படையில் பேரங்கள் பேசப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

ஒப் பெந்திங் கோவிட் -19 என்ற குறியீட்டுப் பெயரில் மேலும் கூறிய அப்துல் ஹமீட், 22 புலனாய்வு ஆவணங்கள் திறக்கப்பட்டு, புலம்பெயர்ந்தோரின் கடத்தலில் ஈடுபட்டதாக 80 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கள்ளக் குடிநுழைவுக் பின்னால் மேலும் 11 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் .

இதற்கிடையில், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைக் கொண்டுவருவதற்கு தாய் கப்பல்களைப் பயன்படுத்துவது குறித்து, அப்துல் ஹமீட் கூறுகையில், இதுபோன்ற தந்திர உபாயங்களோடு கடலின் நடுவில் நங்கூரமிட்டவர்களை அணுகுவது கடினம், ஏனெனில் அவை அண்டை நாடுகளின் நீர்நிலைகளுக்கும்  அனைத்துலக எல்லைக்கும் அருகில் இருக்கின்றன.

அவர்கள் நூற்றுக்கணக்கான மக்களுடன்  கடலின் நடுவில் நங்கூரமிட்டுள்ள தாய் கப்பல்களைப் பயன்படுத்துகிறார்கள், மேலும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு உணவு வழங்கும்  தீய சக்திகளும் உள்ளன.

கடந்த மாதம், லங்காவியில் நுழைய முயன்ற 269 ரோஹிங்கியாக்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அந்தப் படகில் ஒரு பெண்ணின் சடலமும் இருந்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here