தவித்த மனைவி குறித்து கணவன் கிட்ட வராதே என்று அழுதாள்… கொரோனாவால் உருக்கம்!!

 

கொரோனா வைரஸ் காரணமாக பல நாட்கள் மனைவி அனுபவித்த துயரம் குறித்து சீனாவின், வுஹானை சேர்ந்த கணவர் உருக்கமாக பேசியுள்ளார்.

வுஹானில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்தது. தனிமைப்படுத்துவதற்கு முன்பு ஆனந்தமான வாழ்க்கையில் இருந்த நாங்கள், அதன் பின் எங்களுக்குள் என்ன நடந்தது என்பதை விவரிக்கும் செய்தி தான் இது என்று வுஹானில் இருக்கும் கணவர் ஒருவர் கூறியுள்ளார்.

என் மனைவி அவசர சிகிச்சைப் பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நான் ஒரு படத்தயாரிப்பாளராக இருக்கிறேன். கடந்த டிசம்பர் மாதம் என்னுடைய மனைவி கவலைப்பட ஆரம்பித்தாள். ஏனெனில், நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதாக கூறினாள்.

அந்த நோயாளிகள் அனைவரும் ஒரே மாதிரியான அறிகுறியுடன் இருப்பதாகவும், இதை பார்க்கும் போது எனக்கு கவலையாக இருப்பதால், நான் வேலைக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறினாள். இருப்பினும் அவளுக்கு தன்னுடைய நோயாளிகள் மீது மிகுந்த அக்கறை இருந்தது.

இதையடுத்து ஒரு நாள் காலை சரியாக காலை 8.50 மணி இருக்கும், அப்போது என்னை தொடர்பு கொண்டு, எனக்கும் அது பிடித்துவிட்டது(நோய் அறிகுறி) என்று கூறினாள்.

நான் அவள் சொன்னதை புரிந்து கொண்டேன். இதையடுத்து அவளுக்கு சோதனை செய்த போது, நோய் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் என்ன நோய் தொற்று என்பது தெளிவாக இல்லை.

இதனால், என் மனதில் எதுவும் ஓடவில்லை, என்ன செய்வது என்றே தெரியவில்லை? அவளுக்கு அந்த அறிகுறி மிதமாக இருந்தது. அந்த சயமத்தில், மருத்துவ சேவைகள் ஏற்கனவே சுமையை சந்தித்து கொண்டிருப்பதால், மருத்துவர் சில மருந்துகளை பரிந்துரைத்து, வீட்டிலே உங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறினார்.

நான் அவள் அறையை சுத்தம் செய்வதற்காக உள்ளே நுழைந்த போது, அவள் நான் உன்னை உள்ளே வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா? என்று சண்டை போட்டாள். அவள் போர்வையை போர்த்து கொண்டு என்னை பார்க்கவேயில்லை, நான் வீட்டை சுத்தம் செய்துவிட்டு போய்விடுகிறேன் என்று கூறினேன்.

நிலைமை மிகவும் மோசமகலாம் என்பதால், இதை எல்லாம் வீடியோவாக எடுக்கலாம் என்று வுஹான் டைரியில் தொடர்ந்து குறிப்பிட்டேன். நான் அவளுக்கு உதவி செய்ய நினைத்தேன், தேவையானவை சமைத்து கொடுத்தேன். நான் அறையில் சென்ற போது, அவள் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள்.

நான் அழாதே என்று தொட்டு சொன்னேன், அப்போது அவளோ நீ என் கிட்ட வராதே என்று கூறினாள். நிலைமை மோசமானது, அவளது அறிகுறிகள் தீவிரமாகிவிட்டது. அவளது உடம்பு முழுவதும் வலி வந்துவிட்டது, காய்ச்சல் 102F-க்கு மேலே இருந்தது. நான் அவளை தொட்டு, கவலைப்படாதே நான் உன் அருகில் இருக்கிறேன், என்றேன். அவள் முதலில் நீ இந்த அறையை விட்டு வெளியே போ என்று இருமிய நிலையில் கூறினாள்.

எனக்கு பயம் வந்துவிட்டது. பல மருத்துவமனைகளை தொடர்புகொண்டேன். ஆனால் எங்குமே படுக்கைகள் காலியாக இல்லை. 13 நாட்கள் ஆகிவிட்டது. இப்போது அவள் கொஞ்சம், கொஞ்சமாக தேறினாள். இதனால் பாதுகாப்பு உடை அணிந்த நிலையில், மருத்துவரிடம் பரிசோதனைக்காக அழைத்து சென்றேன்.

அப்போது அங்கு மருத்துவர்கள் சொன்ன தகவல் மேலும் வேதனையை கொடுத்தது. ஏனெனில் முன்பு இருந்ததை விட நன்றாக இருக்கிறால், நல்ல ரிசல்ட் வரும் என்று பார்த்தால், நிலைமை இன்னும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

என் இதயம் நொறுங்கிவிட்டது. நான் உடனடியாக அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாததை நினைத்து வேதனையடைந்தேன். அதன் பின் அவள் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

இதையடுத்து, நான் வீடியோ காலில் அவளிடம் பேசினேன், அந்த இடம் எப்படி இருக்கு என்று கேட்டேன், மனதில் ஒரு வித பயம் இருந்தாலும், நான் விரைவில் குணமாகிவிடுவேன் என்ற எண்ணம் தோன்றுவதாக கூறினாள்.

இந்த சமயத்தில் நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் இணையாக எந்த அளவிற்கு இருக்க முடியுமோ அப்படி இருந்தோம். அப்போது தான் இது எந்தளவிற்கு இந்த நோய்க்கு முக்கியம் என்பது தெளிவாக தெரிந்தது.

இறுதியில் அது கொரோனா வைரஸ் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வுஹானில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். உலக சுகாதார அமைப்பு இதை பெருந்தொற்றாக அறிவித்தது. 50 நாட்கள் போராட்டத்திற்கு பின் வுஹானில் பாதிப்பு குறைந்தது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here