கல்வி வளாகத்திற்குத் திரும்பவே மாணவர்கள் ஆசைப்படுகின்றனர்

அக்டோபர் மாதம் அனைத்து மாணவர்களும் கல்வி வளாகத்திற்குத் திரும்பிய பின்னரும் ஆன்லைன் கற்பித்தல், கற்றலைத் தொடர யுனிவர்சிட்டி தெனகா நேஷனல் (யுனிடென்)  யுனிவர்சிட்டி கெபாங்சாஆன் மலேசியா (யு.கே.எம்) திட்டமிட்டுள்ளன.

இதன் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ  டாக்டர் கமால் நஷாருதீன் முஸ்தபா கூறுகையில், பல்கலைக்கழகத்தில் பி.டி.பி முறை ஆன்லைன் ,  நேர்முகக் கற்றல் ஆகியவற்றின் மூலம் நடத்தப்படும் என்றார். இதில் மாணவர்கள் ஆய்வகங்கள் அல்லது அரங்கில் இருக்க வேண்டும்.

உதாரணமாக, மாணவர்கள் நடைமுறை, அல்லது சோதனைகளைச் செய்ய, பொறியியல் ஆய்வகங்களுக்குச் செல்ல வேண்டும், ஆனால், சிலவற்றை ஆன்லைன் வகுப்புகளில் செய்யலாம். 100 சதவீதம் (மாணவர்கள்) வளாகத்திற்குத் திரும்பினாலும் ஆன்லைன் கல்விமுறை தொடரும் என்றார் அவர்.

பொது ,  தனியார் பல்கலைக்கழகங்களைத் திறப்பது என்ற தலைப்பில் விவாதிக்க, தொலைகாட்சியில் தோன்றுவதற்கு முன்பு கமால் நஷாருதீன் செய்தியாளர்களிடம் பேசினார்.

கடந்த வாரம், உயர்கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் நோராய்னி அஹ்மட், மேலும் நான்கு வகை மூன்றாம் நிலை மாணவர்களை ஜூலை முதல் கட்டங்களில் வளாகத்திற்கு திரும்ப அனுமதித்துள்ளார்.

நான்கு பிரிவுகளில் மலேசிய தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் சங்கம் கோரியபடி தனியார் நிறுவனங்களில் 30 சதவீத உள்ளூர் மாணவர்கள் உள்ளனர்.

இதுதொடர்பாக, கமால் நஷாருதீன் கூறுகையில், யுனிடென் 30 சதவீதம் அல்லது சுமார் 2,000 மாணவர்கள் இணைய பிரிச்சினையை எதிர்கொள்வர்.  தங்கள் கிராமங்களில் ஆன்லைனில் படிப்பதற்கு உகந்த சூழல் இல்லாமலிருக்கிறது என்றார்.

வளாகத்திற்குத் திரும்ப விரும்பும் பல மாணவர்கள் உள்ளனர், இதனால் அவர்களுக்கு இணையத்தொடர்பு   வசதியும் உள்ளது.  மேலும் கற்பித்தல், கற்றல் சூழல் மிகவும் உகந்ததாகவும் இருக்கிறது, எனவே, அவர்களை மீண்டும் வளாகத்தில் ஏற்றுக்கொள்வதில்  மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், அவர்கள் நிலையான இயக்க நடைமுறையைப் பின்பற்றவேண்டும் என்பதே முக்கியம்.

இதற்கிடையில், யு.கே.எம் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் மொஹமட் ஹம்டி அப்துல் ஷுக்கோர் கூறுகையில், மாணவர்களில் 66 சதவீதம் அல்லது மூன்றில் இரண்டு பங்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விருப்பம் தெரிவித்திருக்கின்றனர் என்றார்.

கணினிகள் அல்லது மடிக்கணினிகள் இல்லாத ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், மூன்றில் ஒரு பங்கு மாணவர்களுக்காக வழக்கமான நேருக்கு நேர் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று மொஹமட் ஹம்டி கூறினார்.

ஆன்லைனில் படிக்க உதவி தேவைப்படும் சுமார் 260 மாணவர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகளை வழங்குவதை யு.கே.எம் கவனித்து வருவதாகக் கூறினார்.

கணினி இல்லாத மாணவர்களுக்கு இரவு 10 மணி வரை கணினி ஆய்வகங்கள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here