பள்ளிகள் திறப்பு, மாணவர்கள் படு உற்சாகம்

ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒன்று முதல் நான்கு படிவங்களில் உள்ள மாணவர்களும், ஐந்து ஆண்டு மாணவர்களும்  பள்ளிக்குத் திரும்யிருக்கின்றனர்.

கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க இந்த ஆண்டு மார்ச் மாதம் இயக்கம் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) அமல்படுத்தப்பட்ட பின்னர், ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் வீட்டு அடிப்படையிலான கற்றல் முறை மூலம் தங்கள் படிப்பைத் தொடர்ந்தனர்.

ஆன்லைன் மூலம் கற்றல் முறையுடன் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் தடைகளைக் கருத்தில் கொண்டு, மூத்த அமைச்சர் (கல்வி) டாக்டர் மொஹமட் ராட்ஸி எம்.டி ஜிடின் அறிவித்தபடி, பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவாயிற்று. சரியான நேரத்தில் மாணவர்களைக் கற்றல் செயல்முறையைப் பின்பற்ற ஊக்குவிக்கும் வகையில் பள்ளி திறப்பு அமைந்திருக்கிறது.

இருப்பினும், கோவிட் -19 தொற்றுநோய் இன்னும் பரவி வருவதால் பள்ளிகளும் மாணவர்களும் நிலையான இயல்பு நடைமுறைக்கு (எஸ்ஓபி) கட்டுப்பட வேண்டும். மேலும் அனைவரும் புதிய இயல்புடன் பழக வேண்டும்.

ஒன்று முதல் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வாரம் ஜூலை 22 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

மாணவர்கள், ஆசிரியர்களைத் தவிர, பெற்றோர்களும் தங்கள் கால அட்டவணையை சரிசெய்வதிலும், கற்றல் செயல்முறை சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக தங்கள் குழந்தைகளின் அன்றாட தேவைகளை நிர்வகிப்பதிலும் மும்முரமாக உள்ளனர்.

பிற மாணவர்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறப்பது சுகாதார அமைச்சகம், தேசிய பாதுகாப்பு ஆலோசனைமன்றம்  வழிகாட்டுதலைப் பின்பற்றி கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்படும்.

இந்த ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கான பள்ளி அமர்வு கடந்த மாதம் தொடங்கிவிட்டது. சிஜில் பெலாஜாரான் மலேசியா (எஸ்.பி.எம்), சிஜில் வோகேஷனல் மலேசியா (எஸ்.வி.எம்), சிஜில் திங்கி பெர்செகோலாஹான் மலேசியா (எஸ்.டி.பி.எம்) சிஜில் திங்கி அகாமா மலேசியா (எஸ்.டி.ஏ.எம்) ஆகிய சர்வதேச தேர்வுகள் இதில் அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here