பகாங் அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு உதவி

ஒரு சிறப்பு வழங்கலாக ஒரு தடவைக்கு மட்டுமே உதவ 500 வெள்ளியை கிட்டத்தட்ட 8,000 அரசு ஊழியர்களுக்கு வழங்கும் என பகாங் மந்திரி பெசார்  வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்துள்ள்ளார்.

இந்த உதவி ஜூசா தரத்திலும் அதற்குக் கீழும் உள்ள அரசு ஊழியர்களுக்கானது என்றும்  அவர் தலைமையில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும் கூறினார்.

இதனால் மாநிலத்திற்கு RM4 மில்லியன் செலவாகும்.

அனைத்து உள்ளூர் அதிகாரிகளும் மாநில சட்டரீதியான அமைப்புகளும் ஒரே கட்டணம் செலுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன்  என்று அவர் ஓர்  அறிக்கையில் தெரிவித்தார்.

மார்ச் 27 ஆம் தேதி பிரிஹாத்தின்  ராக்யாட் பொருளாதார  உதவியாக (PRIHATIN) வழங்கும்போது பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்தபடி 1.5 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு உதவி வழங்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று வான் ரோஸ்டி கூறினார்.

இந்த மாத இறுதியில் கொண்டாடப்படவுள்ள ஹரிராயா பெருநாளில்  மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த உதவி கிடைக்கும் என்று மந்திரி பெசார் நம்பிக்கைத் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here