முதலாம் ஆண்டு மாணவர்களின் குறும்புத்தனத்தை சமாளிப்பதுதான் சவால்

கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக, கடந்த மார்ச் 15ம் தேதி நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளையும் மூட அரசாங்கம் உத்தரவிட்டதை தொடர்ந்து, இன்று ஆண்டு 5 தொடங்கி படிவம் 4 வரையிலான மாணவர்களுக்கான கற்றல் தொடங்க்கப்பட்டது.

எதிர்வரும் ஜூலை 22ம் தேதி பள்ளி முழுமையாக திறக்கப்படும் வேளையில், நேற்று இங்கு லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ள வேளையில், அதன் நடப்பு நிலவரங்கள் குறித்து அப்பள்ளி தலைமையாசிரியர் மோகனிடம் விளக்கம் கேட்க்கப்பட்டது.

நேற்று ஆறு மற்றும் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் சுமார் 266 பேர்களில் 90 சதவீதம் பேர் வருகை தந்துள்ளதாக பதிவாகிவுள்ளார்கள். மொத்தம் 10 வகுப்பறைகள் மீண்டும் தொடங்கப்பட்டது அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 22ம் தேதி முதலாம் ஆண்டு தொடங்கி 4ம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளி முழுமையாக திறக்கப்படும். தற்போதைய சூழ்நிலையில் ஆறு, ஐந்து, நான்கு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் எஸ்ஓபி முறையை பின்பற்றுவதில் சிரமம் இருக்காது.

அவர்கள் எஸ்ஓபியை பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருப்பார்கள். முன்னதாக அதுக்குறித்து பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகள் சம்பதப்பட்ட, அதற்கான வழி முறைகளை உள்ளடக்கிய ஆசிரியர்கள் நடிப்பில் பதிவு செய்யப்பட்ட நாடக வடிவிலான காணொளிகள் தயார் செய்திருந்தோம்.

அவை கூகல் வகுப்பு அறைகள் மூலமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு அவர்களின் கைப்பேசிக்கு அனுப்பிவைத்திருந்தோம். அதன் மூலமாக கொடுக்கப்பட்ட தெளிவான விளக்கம் அவர்களை போய் சேர்ந்துவிட்டது.

எனவே இந்த எஸ்ஓபி நடைமுறையை பின் பற்றுவதில் மாணவர்களுக்கு எந்தவொரு சிக்கலும், குழப்பமும் ஏற்பட வாய்ப்பில்லை.

ஆனால் இக்கட்டுப்பாட்டு அமுலக்கத்தில் குறும்புத்தனம் மிக்க முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களை சமாளிப்பதுதான் ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய சவாலாக அமையும் என தலைமையாசிரியர் தெரிவித்தார்.

அப்பிஞ்சு மாணவர்களுக்கு எஸ்ஓபியை பற்றி புரியவைத்து, அவர்கள் அதனை பின்பற்றவைப்பது என்பது சிரமமான ஒரு காரியம்தான். கொரோனா கிருமி எங்கே என காண்பிக்க சொல்லும் துணிச்சலான அவர்களின் கேள்வி தடுமாறவைக்கும் பல சமயங்களில் என்பதுதான் உண்மை.

பெற்றோரால் அக்கிருமி பாதிப்பு குறித்து அவர்கள் தெளிவு அடைந்திருந்தால், எஸ்ஓபியின் அவசியத்தை பற்றி அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் என மோகன் தெரிவித்தார்.

இதனிடையே அப்பள்ளியின் காவல்துறை தொடர்ப்பு அதிகாரியான சார்ஜான் மேஜர் ராஜேந்திரன் கந்தசாமி, நேற்று பள்ளிக்கு வந்திருந்த மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்த்தை காணமுடிந்தது. அவர்கள் ஒவ்வொருவரின் உஷ்ண நிலையை ஆசிரியர்கள் பரிசோதனை செய்தார்கள். வகுப்பு வாரியாக மாணவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக செனிடைஷர் திராவியத்தை கொண்டு மாணவர்கள் தங்கள் கைகளை கழுவிக் கொண்டார்கள்.

வகுப்பறையில் மாணவர்கள் ஒரு மீட்டர் இடைவேளிவிட்டு அமர்ந்திருந்தார்கள். மேலும் முன்னதாக மாணவர்கள் ஆர்டர் செய்த உணவுகள் பொட்டலங்களில் வழங்கப்பட்டதை காணமுடிந்தது. அவ்வுணவுகளை அவர்கள் வகுப்பறையில் அமர்ந்தாவறு சாப்பிட பள்ளி நிர்வாகம் செய்திருந்தது. அதே வேளை் உஷ்ண நிலை அதிகரித்த மாணவர்கள் இருந்தால், அவர்களை தணிமை படுத்தும் அறைகள் ஆண் மற்றும் பெண் என தனியாக அங்கு தயார் செய்யப்பட்டிருந்தது.

மொத்தத்தில் இப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எஸ்ஓபியை முழுமையாக பின்பாற்றுகிறார்கள் என்றும் பள்ளி நிர்வாகம், தலைமையாசிரியர், துணை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அவர் பாராட்டை தெரிவித்துக்கொண்டார்.

இதனிடையே மாணவர்களுக்கான கல்வி மற்றும் விளையாட்டு சம்பந்தப்பட்ட அனைத்து குழு நடவடிக்கைகளுக்கும் பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளதாக அப்பள்ளி துணைத் தலைமையாசிரியர் திருமதி் கலா கூறினார்.

மாணவர்களை பாதுகாக்கும் நிலையில் ஆசிரியர்கள் அனைவரும் முழு விழிப்பு மற்றும் தயார் நிலையில் உள்ளார்கள். ஒரு வகுப்பறையில் தலா 30 மாணவர்கள் அமரச் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.

– நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here