பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கட்டணம் குறைப்பு

2019/2020 கல்வி அமர்வின் இரண்டாம் தவணைக்கான அனைத்து பொது பல்கலைக்கழகங்களிலும் விடுதி, சேவைக் கட்டணம் 15 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அமர்வு தெரிவித்தது.

டாக்டர் நோராய்னி அகமது கூறுகையில், இந்த நடவடிக்கையில் மொத்தம் RM72 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இதில் RM20 மில்லியன் நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மற்ற RM52 மில்லியன் பல்கலைக்கழகங்களின் உள் ஒதுக்கீட்டில் இருந்து வரும்.

கோவிட் -19 தொற்றுநோயால் வீட்டு வருமானம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் பெற்றோர்களிடமிருந்து வந்த புகார்களைத்  தொடர்ந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள பொது பல்கலைக்கழகங்களின் மொத்தம் 523,318 மாணவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று அவர் கேள்வி நேரத்தின்போது பதிலளித்தார்.

தொற்றுநோய் காரணமாக மார்ச் மாதம் முதல் வளாகத்தில் விரிவுரைகளில் கலந்து கொள்ள முடியாததால் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தில் ஒரு பகுதியை திருப்பித்தர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்பதை ஷம்சுல் இஸ்கந்தர் தெரிந்து கொள்ள விரும்பினார்.

இதற்கிடையில், அக்டோபரில் உயர்கல்வி நிறுவனங்களை (ஐபிடி) முழுமையாகத் திறப்பது குறித்த ஷம்சுல் இஸ்கந்தரின் அசல் கேள்விக்கு பதிலளித்த நோராய்னி, திட்டங்களுக்கு ஏற்றதாகக் கருதப்படும் கற்றல் முறைகள் குறித்து முடிவு செய்வதற்கான நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

ஆன்லைன் கற்பித்தல்  கற்றல் முறையை பின்பற்றுவதும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

இருப்பினும், கற்பித்தல், கற்றல் செயல்முறை எப்போதும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைக்கு இணங்க வேண்டும்  என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here