ஜோகூர் வெள்ளம் குறைகிறது

ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 41 குடும்பங்களின் எண்ணிக்கை 174 ஆக குறைந்துள்ளது.

மாலை 5 மணியளவில், பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களான டாங்காக் ,  முவார் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் இருந்தனர்.

மாநில சுகாதார ,சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஆர். வித்யானந்தன் ஓர் அறிக்கையில், தற்போது வரை  நான்கு தற்காலிக வெளியேற்ற மையங்கள் இருக்கின்றன் என்றார். முவாரில் மூன்று, ,தாங்காக்கில் ஒன்று செயல்பாட்டில் உள்ளன.

முவாரில்,   மெனெங்கா கெபாங்சான் பண்டார் மஹாராணி (எஸ்.எம்.கே) பள்ளியில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  பிற்பகலில் 50 பேருடன் ஒப்பிடும்போது 23 ஆகக் குறைந்துள்ளது.

இதற்கிடையில், 21 குடும்பங்களைச் சேர்ந்த 91 பேர் இன்னும் உள்ளனர்.  எட்டு குடும்பங்களை உள்ளடக்கிய 33 பேர் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். டாங்காக் மாவட்டத்தில், எஸ்.கே.தஞ்சோங் காடிங் 5 இல் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் மட்டுமே உள்ளனர்.

பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட பகுதிகள்  தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், பிபிஎஸ்ஸில் பாதிக்கப்பட்டவர்கள் , ஊழியர்களின் ஆரோக்கியத்தை சுகாதார மலேசியா அமைச்சகம் (எம்ஓஎச்) தொடர்ந்து கண்காணித்தும் வருகிறது  என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here