எம் ஆர் டி சுரங்க வேலை 98 விழுக்காடு பூர்த்தி

எம்ஆர்டி புத்ராஜெயா வழி (முன்னர் எம்ஆர்டி சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா லைன் என்று அழைக்கப்பட்டது)  அதன் இறுதி சுரங்கப்பாதை பணிகள் (டிபிஎம்) அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலைய தளத்தில்  நிறைடைந்திருப்பது இத்திட்டத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லா அமைந்திருக்கிறது.

எம்ஆர்டி ஸ்டேஷன் தளத்திலிருந்து பணிகளைத் தொடங்கவும், ஜாலான் ஸ்டூனர், பெர்சியாரான் கே.எல்.சி.சி, ஜாலான் பிஞ்சாய், ஜலான் ஆம்பாங் , எல்.ஆர்.டி கெளானா ஜெயா வழிச் சுரங்கங்கள், அம்பாங்கிற்கு அடியில் எம்.ஆர்.டி சுரங்கப்பாதையைத் தாங்கவும் 2019 இல் இத்திட்ட்டம் செப்டம்பரில் தொடங்கப்பட்டதிலிருந்து டி.பி.எம் 774 தொடர்பில்,  எம்.ஆர்.டி நிலையத்தை 917 மீட்டர் தொலைவில் நிறுத்தவும் அமைந்திருக்கிறது.

எம்.ஆர்.டி கமுடா, எம்.ஆர்.டி புத்ராஜெயா நிறுவனங்கள் இத்திட்டத்திற்கான குத்தகையாளர்களாக  உள்ளனர்.

இப்பணியினைத் தொடர்ந்து, எம்.ஆர்.டி புத்ராஜெயா சுரங்கப்பாதை அகழ்வாராய்ச்சி 98 நிறைவடைந்துள்ளது. சுமார் 400 மீட்டர் சுரங்கப்பாதையாக இது அமைந்திருக்கும். இப்பாதை அடுத்த மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.ஆர்.டி புத்ராஜெயா,  கிளாங் வேலி எம்.ஆர்.டி திட்டத்தின் கீழ் இது இரண்டாவதாகும். இந்த வரிசையில் 36 நிலையங்கள் இருக்கின்றன, அவற்றில் ஒன்பது நிலையங்கள் நிலத்தடியில் அமைந்தவை. . குவாசா டாமான்சாராசாராவிலிருந்து புத்ராஜெயா சென்ட்ரல் வரை 56.2 கி.மீட்டர் தூரத்தில் இவை அமைந்திருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here