கொரோனா காலத்தில் சிறுமிக்குக் குழந்தை

பெர்ச்சாம் என்ற இடத்தில் உள்ள தாமான் ஶ்ரீ டெர்மவான் பகுதியில் இரண்டு மாடி வீட்டின் கூரையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்று நல்ல நிலையில் உள்ளது என்றும்,  ராஜா பெர்மைசுரி பைனுன் மருத்துவமனையின் குழந்தைப்பிரிவில் அக்குழந்தை தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

குழந்தையின் நிலை அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநில பெண்கள் மேம்பாடு, குடும்ப, சமூக நலக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் வான் நோராஷ்கின் வான் நூர்டின் தெரிவித்திருக்கிறார்.

குணமடைந்ததும், அக்குழந்தையை சமூக நலத்துறையே தற்காலிகமாக தத்தெடுக்கும். என்று அவர் தெரிவித்தார். இங்குள்ள  மழலையர் பள்ளி ஒன்றுக்கு வருகை தந்தபோதே செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமையன்று, முழுயாகப் பிறந்த அந்த ஆண் குழந்தை, தொப்புள் கொடியுடன் அப்படியே கூரையில் போட்டப்பட்டிருந்தது. அக்குழந்தைய்ன் தலையில் காயமும் இருந்தது.தலையில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து வான் நோராஷ்கின் கருத்து தெரிவிக்கையில், குழந்தைஅயை ஈன்றெடுத்த 16 வயதான சிறுமி  இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், அவரது உடல்நலம், உணர்ச்சி உளவியல் குறித்து அதே மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here