கைவிடப்பட்ட பிறந்த குழந்தை

கோலாலம்பூருக்கருகில் உள்ள அம்பாங் பகுதியின்  ஜாலான் காபுஸ்-ஜாலான் பிந்தாங் சந்திப்பில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் அப்படியே கைவிடப்பட்டிருப்பதைக் போலீசார் அறிந்தனர்.

காலை 7 மணியளவில் ஓர் அட்டைப்பெட்டியில் குழந்தையைக் கண்டுபிடித்தது குறித்து காவல் துறைக்கு அழைப்பு வந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி நூர் அஸ்மி யூசோஃப் தெரிவித்தார்.

அக்குழந்தையுடன், ஆவணங்கள் அல்லது உடமைகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை, எனினும் அக்குழந்தை பரிசோதனைக்காக அம்பாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

பரிசோதனையில் 2.8 கிலோ எடையுள்ள அக்குழந்தை குறைபாடின்றி, கடந்த 24 மணி நேரத்திற்குள் பிறந்திருக்க வேண்டும் என்பதாகவும்   ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பான தகவல்களை அறிந்த பொதுமக்கள் 018-9604202 என்ற எண்ணில் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் சனாரியாவைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள எந்த காவல் நிலையத்திற்கும் செல்லலாம்.

குழந்தைகளை கைவிடுவதற்கான தண்டனைச் சட்டம் பிரிவு 31மின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here