நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஜனவரி முதல் குறைவடைந்து வருகிறது.
கடந்த 2022 டிசம்பரில் இருந்த 599,600 நபர்களுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு ஜனவரியில் 0.6 சதவீதம் குறைந்து 596,100 நபர்களாக பதிவாகியுள்ளதாக தேசிய தொழிலாளர்கள் அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு ஜனவரியில் மலேசியாவின் வேலையின்மை விகிதம் 3.6 விழுக்காடாக இருந்தது என்றும் மேலும் இந்த மாதத்தில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 69.8 சதவீதமாக இருந்தது என்றும் தொழிலாளர் தலைமை புள்ளியியல் நிபுணர், டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் கூறினார்.
உலகப் பொருளாதாரத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்ப, நாட்டின் பொருளாதார நிலையின் தற்போதைய முன்னேற்றத்தைத் தொடர்ந்து நாட்டின் தொழிலாளர் சந்தை தொடர்ந்து மேல்நோக்கிய அதிகரிப்பைக் காட்டுவதாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.









