நயன்தாராவை ஏன் யாருமே கேள்வி கேட்க வில்லை

நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தது பெரும் சர்ச்சையாகி சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இடம் பெற்றது. வனிதா விஜயகுமார் திருமணத்தை ஒருசில பிரபலங்கள் விமர்சனம் செய்ய, அவர்களுக்கு வனிதா பதிலடி கொடுத்து வெளியான வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாக டுவிட்டர் மூலம் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்களுடன் மோதிக் கொண்டிருந்த வனிதா, திடீரென நெற்று டுவிட்டரில் இருந்து வெளியேறினார். இதற்கு நயன்தாரா குறித்த ஒரு டுவீட் தான் காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

நேற்று வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில், இதற்கு முன்னர் நயன்தாரா, பிரபுதேவாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருந்தபோதிலும் நயன்தாரா அவருடன் ரெலேஷன்ஷிப்பில் இருந்ததை ஏன் யாருமே கேள்வி கேட்க வில்லை’ என்று குறிப்பிட்டிருந்திருக்கிறார்.

மேலும் இந்த விஷயத்தில் என்னை குற்றஞ்சாட்டியவர்கள் நயனை ஏன் எதுவுமே சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலடி கொடுத்த நயன்தாரா ரசிகர்கள், ‘ நயன்தாராவுடன் பிரபுதேவா ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னரே நயன்தாராவை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், விவகாரத்துக்கு அவர் விண்ணப்பம் செய்திருந்ததாகவும், உங்களை போல் அவர் விவாகரத்து பெறுவதற்கு முன்னரே திருமணம் செய்யவில்லை என்றும் பதிலடி கொடுத்தனர்.

மேலும் நயன்தாராவிற்கு ஆதரவாக டுவிட்டரில் ஒரு கூட்டம் கூடிவிட்டது. மேலும் நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி இருக்கிறார்கள். இதனால் தான் வனிதா டுவிட்டரை விட்டு வெளியேறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here