ருக்குன் நெகாரா கோட்பாட்டினை அனைவரும் பின்பற்ற வேண்டும் – டத்தோ பரம் வலியுறுத்தல்

நாட்டின் சுபிட்சத்திற்கும் நிலைத்தன்மைக்கும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்கிறார் கெராக்கான் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ பரம்.  ருக்குன் நெகாரா கோட்பாட்டினை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் தலைவர்கள் சுவரொட்டியை சேதப்படுத்தியது மிகவும் வருத்தத்தையும் வேதனையும் அளிக்கிறது என்றார். பல இன மக்கள் வாழும் நம் நாட்டில் அனைவரையும் மதிக்க வேண்டும்.

ஆனால் இதுபோன்ற சில விஷமிகளால் நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. சுவரொட்டியை சேதப்படுத்தியவர்களை காவல்துறை கண்டறிந்து நிச்சயம் தண்டனை வழங்க வேண்டும். அவ்வாறு தண்டனை வழங்கினால் மற்றவர்களும் அது படிப்பினையாக இருக்கும் என்று டத்தோ பரம் கருத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here