மருத்துவமனையில் பெண்கள் சேலை, துப்பட்டா அணிய தடை

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் பெங்களூரில் கொரோனா பாதித்த இரண்டு பெண்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், இனி பெண்கள் சேலை, துப்பட்டா அணிய தடை என்று அறிவித்துள்ளது. ஒரு தற்காலிக ஏற்பாடகவே இதனைச் செய்துள்ளோம் என்றும் இதுகுறித்து விரிவாகச் சிந்திக்க வேண்டியதுள்ளது என்றும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here