யானைகள் அட்டகாசம்: சுமார் 1,000 வெள்ளி பொருளை இழந்தார் வியாபாரி

கோத்தா திங்கி:  இரண்டு காட்டு யானைகள்   தனது கடைக்குள் நுழைந்ததால் சுமார் RM1,000 இழப்பை 52 வயதான பழ விற்பனையாளர் சந்தித்தார். இங்குள்ள மாவாய், பத்து 6 இல் அமைந்துள்ள பாதிக்கப்பட்டவரின் கடை, வெள்ளிக்கிழமை (ஜூலை 31) இரவு 8 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கோத்தா திங்கி OCPD Supt Hussin Zamora தெரிவித்தார். இதில் ஒரு பெண் காயமின்றி தப்பித்தார். யானைகள்  தாய் மற்றும் கன்று என்று நம்பப்படுவதாகவும், இந்த சம்பவத்தின் மேலதிக நடவடிக்கைகளுக்காக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறைக்கு (பெர்ஹிலிட்டன்) பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

யானைகள் இருப்பது இப்பகுதியில் மிகவும் பொதுவானது. இந்த பகுதியில் முந்தைய சம்பவமும் நிகழ்ந்தது, காட்டு யானை தாக்குதலால் ஒரு நபரின் உயிரிழந்தார்  என்று ஹுசேன் மேலும் கூறினார். நேற்றிரவு நடந்த சம்பவத்தில், சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த வீடியோ பதிவில் சில பழங்களை சாப்பிடும்போது தாயும் கன்றும் பழக் கடை வழியாக வலம் வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததை காண முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here