முறையான ஆவணங்கள் இல்லாத 13 வெளிநாட்டினர் கைது

பெட்டாலிங் ஜெயா: கோத்தா டாமன்சாரா உடம்பு பிடி மையத்தில்  வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) மாலை நடத்தப்பட்ட சோதனையில் 13 வெளிநாட்டினரை போலீசார் தடுத்து வைத்தனர். பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் நிக் எசானி முகமட் பைசல் கூறுகையில், மூன்று ஆண்களும் எட்டு பெண்களும் மசாஜ் செய்பவர்கள் என்றும்  மற்ற இரண்டு ஆண்கள் வளாகத்தின் பராமரிப்பாளர்களாக இருப்பவர்கள் என்றார்.

நாங்கள் வளாகத்தை சோதனையிட்டபோது வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கும் தனிப்பட்ட அறைகளில் மசாஜ் செய்யப்பட்டன. முறையான அனுமதி இல்லாமல் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தியதற்காக 28 வயதான ஒரு வெளிநாட்டவரை நாங்கள் தடுத்து வைத்தோம். மேலும் 12 பேர் வேலைக்கு சரியான அனுமதி இல்லாததால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

மற்றொரு சோதனை சனிக்கிழமை (ஆக. 8)  ​​கோத்தா டாமன்சாராவின் ஜாலான் பி.ஜே.யூ 5/10 டத்தாரான் சன்வேயில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அச்சோதனையின் போது கைது செய்யப்பட்ட அனைவரிடமும் அடையாள ஆவணங்கள் இல்லை என்பதோடு மேலும்  மீட்பு இயக்கம் கட்டுப்பாட்டு ஒழுங்கு (MCO) மற்றும் தொடர்புடைய நிலையான இயக்க நடைமுறைகள் (SOP கள்) ஆகியவற்றை மீறியுள்ளனர்  என்று ஏசிபி நிக் எசானி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here