அரண்மனை 3 – அதிரடி முடிவெடுத்த சுந்தர் சி

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.

இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு குஜாரத்தில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே தடைபட்டது.

இந்தநிலையில் ஊரடங்கில் படப்பிடிப்புக்கு தளர்வுகளுடன் அரசு அனுமதித்தாலும் ஆயிரம் பேரை ஒரே இடத்தில் ஒன்றுகூட்டி படப்பிடிப்பு நடத்தமுடியாது என்பதால் நிலைமை சீராகும் வரை இப்படத்தை தள்ளிவைக்க சுந்தர் சி, முடிவுசெய்து விட்டாராம். மேலும் தற்போது லாக்டவுனில் குறைவான கதாபாத்திரங்களை வைத்து அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்துள்ளாராம் சுந்தர் சி, தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பை தான் முதலில் துவங்க இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here