மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா ரத்து குறித்து இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.சுந்தரவடிவேல் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவிலின் மிகமுக்கிய திருவிழாவான சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்றி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு ஆவணி மூலத்திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது மிகுந்த கண்டனத்திற்கு உரியது.

மற்ற மதத்தினரின் திருவிழா விஷயங்களில் மென்மையான போக்கை கடைபிடித்து அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் தமிழக அரசு இந்து கோவில் திருவிழாக்களை கோவில் வளாகத்திற்குள் நடத்துவதற்கு கூட தடை விதிக்கிறது. இது இந்துக்களின் தன்மானத்தையும், பக்தி உணர்வையும், சகிப்பு தன்மையையும் அவமதிக்கும் செயலாகும்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் நிர்வாகமும் பல்வேறு காரணங்களை சொல்லி அதற்கு ஆகமம், புராண விதிகளை கூறி மக்களை சமாதானப்படுத்துவது ஒரு ஏமாற்று வேலை.மதசார்பற்ற தமிழக அரசு மதத்திற்கு ஒரு நிலைப்பாடு என்ற வகையில் செயல்பட்டால் திருக்கோவில் நிர்வாகத்திற்கும், அறநிலையத்துறைக்கும் தக்க நேரத்தில் தக்க வகையில் பக்தர்களை திரட்டி இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பாடம் புகட்டுவோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இந்துக்கள் சட்டத்தையும், நடைமுறைகளையும் எந்த காலத்திலும் மீறாதவர்கள் அந்த உணர்வை அரசு தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here