186 பள்ளிகளில் கட்டணம் பாதியாக குறைப்பு

சவுதி அரேபியாவின் வட பிராந்தியத்தில் டாபுக் மாகாணம் உள்ளது. அந்த மாகாணத்தின் கல்வி இயக்குனரகம், கொரோனா தாக்கத்தால் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிக்கட்ட முயற்சி மேற்கொண்டது.

அதன் பலனாக, டாபுக்கில் உள்ள 186 பள்ளிகள், நடப்பு கல்வியாண்டின் முதல் செமஸ்டர் கல்வி கட்டணத்தை பாதியாக குறைக்க சம்மதித்துள்ளன. இதனால், 30 ஆயிரம் மாணவர்கள் பலன் அடைவார்கள். அவர்களின் பெற்றோருக்கு மொத்தம் 9 கோடி சவுதி ரியால் மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here