சுஷாந்தின் தங்கை என்னிடம் தவறாக நடக்க முயன்றார் -ரியா

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (வயது 34) மும்பையில் உள்ள குடியிருப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இது தற்கொலை அல்ல, கொலையாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே நேற்று இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், நடிகை ரியா சக்ரபோர்த்தி சுஷாந்தின் தங்கை பிரியங்கா மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

இதுகுறித்து ரியாவின் வக்கீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரியாவும் சுஷாந்தும் பழக ஆரம்பித்த சில நாட்களில் அவ்வப்போது ஒருவர் வீட்டுக்கு இன்னொருவர் சென்று தங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த சமயத்தில் சுஷாந்தின் தங்கை பிரியங்கா சிங்கும் அவரது கணவரும் சுஷாந்த் வீட்டில் இருந்துள்ளனர்.

ஒருமுறை பார்ட்டிக்கு சென்றிருந்தபோது சுஷாந்தின் தங்கை அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் ஆண், பெண் என வித்தியாசமின்றி வரம்பு மீறி நடந்துகொள்ள ஆரம்பித்தாராம். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்ததும், சுஷாந்தும் அவரது தங்கையும் மீண்டும் மது அருந்த ஆரம்பிக்க, ரியாவோ சுஷாந்தின் அறைக்கு சென்று தூங்கிவிட்டாராம்.

திடீரென நள்ளிரவில் விழிப்பு வந்து எழுந்து பார்த்தபோது சுஷாந்தின் தங்கை பிரியங்கா தன்னை கட்டிப்பிடித்தபடி தன்னருகில் படுத்திருந்ததையும், தன்னிடம் அத்துமீறி நடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்த ரியா, மறுநாள் சுஷாந்திடம் இதுபற்றி கூறிவிட்டு கோபத்துடன் தனது வீட்டுக்கு சென்றாராம்.

இதுகுறித்து சுஷாந்த் தனது தங்கையை திட்டியதாகவும், பின்னர் வந்த நாட்களில் சுஷாந்தின் குடும்பத்தினர் ரியாவிடம் பேசுவதை தவிர்த்தார்களாம். அதனால் தான் சுஷாந்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் பட்டியலில் ரியாவின் பெயரை வேண்டுமென்றே சேர்க்கவில்லை” என்று ரியாவின் வக்கீல் கூறியுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here